செய்திகள்

வேதாரண்யம் அருகே இந்திய கம்யூனிஸ்டு சாலை மறியல்

Published On 2017-05-27 19:20 IST   |   Update On 2017-05-27 19:20:00 IST
வேதாரண்யம் தாலுகா மருதூர் இரட்டைக்கடையடியில் மயானத்திற்கு சாலை வசதி கேட்டு இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்,:

வேதாரண்யம் தாலுகா மருதூர் இரட்டைக்கடையடியில் மயானத்திற்கு சாலை வசதி கேட்டு இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை வகித்தார். சாலை மறியலில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்கம் நாகராஜன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தகவலறிந்து சமூகநலத்துறை தாசில்தார் ரவி, வேதாரண்யம் சரக டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமகிருஷ்ணன், கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் சாலை மறியல் நடத்தியவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News