செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2017-05-17 17:53 IST   |   Update On 2017-05-17 17:53:00 IST
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் தலைமையிலான சிறப்பு பள்ளி பாதுகாப்பு கூட்டுக்குழு ஆய்வு மேற்கொண்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் தலைமையிலான சிறப்பு பள்ளி பாதுகாப்பு கூட்டுக்குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி சாதனங்கள், தீயணைப்பு கருவிகள், ஆபத்துகால சிறப்பு வழிகள், மற்றும் சமிக்கை கருவிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,

இந்த ஆய்வில் உள்ள 39 பள்ளிகளுக்கு சொந்தமான 160 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இன்று நடத்தப்படும் சோதனையில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவ்வாகனம் நிராகரிக்கப்படும் எனவும் குறைபாடுகள் சீர்செய்து மறுஆய்வுக்குப்பின் தகுதி உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த வாகனம் மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தெரிவித்தார்.

Similar News