செய்திகள்

தொண்டர்கள் விருப்பத்துக்காகவே பேனர்களை அகற்றியுள்ளோம்: தம்பிதுரை

Published On 2017-04-27 13:26 IST   |   Update On 2017-04-27 13:26:00 IST
தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
ஆலந்தூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அதன் அடிப்படையில் 2 அணிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்த சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இரு அணிகளும் இணையும். இரு அணியினரிடமும் அதற்கான ஆர்வம் தெரிகிறது.

பெரும்பாலான தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. தினகரன் மற்றும் சிலர் கட்சியை விட்டு ஒதுங்கி இருப்பதாக கூறிவிட்டனர். அதன் அடிப்படையிலும், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அது பற்றி மற்ற கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News