செய்திகள்
உத்திரமேரூரில் ஜவுளிக்கடையில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்
உத்திரமேரூரில் நள்ளிரவில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் துணிகள் எரிந்து நாசம் அடைந்தன.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் பஜார் வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகன்லால். நேற்று இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
நள்ளிரவில் கடையில் இருந்து பயங்கர புகை மூட்டம் வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளர் மோகன்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்த போது துணிகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தகவல் அறிந்த உத்திரமேரூர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் ஆகியங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் ஜவுளிக்கடையில் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.