செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது24). இவர் மோட் டார்சைக்கிளில் ஏனாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்தினை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.