செய்திகள்

கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்

Published On 2017-04-17 12:43 IST   |   Update On 2017-04-17 12:43:00 IST
தமிழக அரசியலில் தற்போது பல்வேறு விவகாரங்களால் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.

காலை 11.35 மணியளவில் விமான நிலையத்துக்கு வந்த அவர் நேரடியாக கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் சென்னை வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்தது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, 3 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு, இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது என்று அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு சூடு பிடித்து வருகிறது.


இந்த குழப்பமான அரசியல் சூழ்நிலை மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுத்து வரும் போராட்டம் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்யவே கவர்னர் அவசரமாக சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News