செய்திகள்

சம்பள பணம் கொடுப்பதில் பெண்ணுடன் தகராறு: வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் கைது

Published On 2017-04-16 16:50 IST   |   Update On 2017-04-16 16:50:00 IST
சம்பள பணம் கொடுப்பதில் பெண்ணுடன் தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பிருந்தா அவன்யூவை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. அதே பகுதியில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இவரது தொழிற்சாலை யில் சிலம்பொலி நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வேலை பார்த்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சரஸ்வதி தனக்கு சேர வேண்டிய சம்பள பணம் குறித்து விஜய் ஆண்டனியிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த விஜய்ஆண்டனி இதுபற்றி கேட்பதற்காக சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றார். அப்போது சரஸ்வதிக்கு ஆதரவாக சிலர் விஜய் ஆண்டனியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விஜய் ஆண்டனி தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டு மிரட்டினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஆண்டனியை கைது செய்தனர்.

Similar News