செய்திகள்

கொடைக்கானலில் பெய்த சாரல் மழை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2017-04-12 10:14 GMT   |   Update On 2017-04-12 10:14 GMT
கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் நீடித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த வாரம் வெயில் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் பொழுதில் அறையிலேயே முடங்கி கிடந்தனர். மாலை நேரத்தில் மட்டுமே சீதோசனம் நிலவி வந்ததால் வெளியே வந்தனர். பொதுமக்களும் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.

இதனிடையே பகல் பொழுதில் மேகமூட்டமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் ஓரளவு தணிந்தது. ஏரிச்சாலை, செவன்ரோடு, கொடைக்கானல் நகராட்சி சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சி சென்றனர்.

அதனைத் தொடர்ந்து குளுமையான சீதோசனம் நிலவியது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News