செய்திகள்

திண்டுக்கல் அருகே இளம்பெண்களை கடத்தும் வட மாநில இளைஞர்கள்

Published On 2017-04-10 10:55 GMT   |   Update On 2017-04-10 10:56 GMT
மில்லுக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண்கள் வட மாநில இளைஞர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

மில்லுக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண்கள் வட மாநில இளைஞர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பஞ்சாலை பொது தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

வேடசந்தூரைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் சண்முகப்பிரியா (வயது 16). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் பேகத்தின் மகள் அஸ்மா (21)வும் அதே மில்லில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 22-ந் தேதி வேலைக்கு சென்ற அவர்கள் இருவரும் விடு திரும்பவில்லை. இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்டபோது வேலை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டதாக கூறினர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளோம்.

எனது மகளின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது இந்தியில் சிலர் பேசினர். எனக்கு இந்தி தெரியாது என்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை. வேடசந்தூர் பகுதியில் உள்ள மில்களில் அதிகளவில் வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் எனது மகளையும் மற்றும் அஸ்மாவையும் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனவே அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News