செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி த.மா.கா. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-15 17:27 GMT   |   Update On 2017-03-15 17:27 GMT
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி த.மா.கா. கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள கார் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி த.மா.கா. கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள கார் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், நெடுஞ்செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அலமு.தங்கவேல் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை தலைவர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி, உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Similar News