செய்திகள்

செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2017-03-09 12:42 IST   |   Update On 2017-03-09 12:42:00 IST
செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு:

மணலியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று இரவு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டை அடுத்த இருகுன்றபள்ளி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்ராஜும், அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கோகுல்ராஜுடன் இறந்த நண்பர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 25 வயது இருக்கும். செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News