செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே அரசு பஸ் விபத்து - 10 பயணிகள் படுகாயம்

Published On 2017-03-09 12:17 IST   |   Update On 2017-03-09 12:17:00 IST
அச்சரப்பாக்கம் அருகே சாலை தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
மதுராந்தகம்:

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் முனுசாமி வண்டியை ஓட்டினார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழப்பேடு டோல்கேட் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது லேசாக மழை பெய்தது.

அப்போது முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் டிரைவர் முனுசாமி உள்பட 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News