செய்திகள்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கடும்பனி மூட்டம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கடும்பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிபொழிவு அதிகமாக காணப்படுகிறது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப் புகை படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முன் விளக்கை எரிய விட்டப்படி மெதுவாக சென்றனர்.
பனிமூட்டத்தால் மாமல்லபுரத்துக்கு வரும் காலை நேர பேருந்துகள் அனைத்தும் தாமதமாக வந்து சென்றது. காலை 9.30-க்கு பின்னரே பனிமூட்டம் விலகி இயல்பு நிலை திரும்பியது.