செய்திகள்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் தாயார் மரணம்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் 83 வயது தாயார் அம்பாலட்சுமி மரணமடைந்தார். நேற்று மாலை அவரது உடல் தண்டலம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
இவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரி, தாய் அம்பாலட்சுமி (வயது 83) ஆகியோர் பெரிய பாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
நேற்று காலை கிராம மக்கள் நடத்திய ஆயுள் ஹோமம் நிகழ்ச்சியில் அம்பாலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அம்பாலட்சுமி இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், உறவினர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை அம்பாலட்சுமியின் உடல் தண்டலம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.