செய்திகள்
சட்டசபையை கேலிக் கூத்து இடமாக மாற்றிவிட்டனர்: பொன்.ராதாகிருஷ்ணன்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது தமிழக சட்டசபையை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கேலி கூத்து நடைபெறும் இடமாக மாற்றிவிட்டனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது தமிழக சட்டசபையை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கேலி கூத்து நடைபெறும் இடமாக மாற்றிவிட்டனர். ஏற்கனவே நான் சொன்னது போல சட்டசபை துகில் உரியும் இடமாக மாறிவிட்டது.
சட்டசபை விவகாரத்தில் சபாநாயகரிமும் தவறு இருக்கிறது. தி.மு.க.வின் மீதும் தவறு இருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்ட போது 2 நாளிலேயே பெரும்பான்மையை நிரூபித்தார்கள்.
உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு அடுத்த மாதமே தேர்தல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.