செய்திகள்

சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை

Published On 2017-02-12 03:33 GMT   |   Update On 2017-02-12 03:33 GMT
சென்னையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை சமர்பிக்கவும், இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

அ.தி.மு.க. சார்பில் யார் அடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது குறித்து அசாதாரண சூழல் நிலவுவதால் மாநகரில் எவ்வித அசம்பாவிதமும் நடப்பதை தவரிக்கும் நோக்கில் சென்னையின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களிடம் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 

வெகு விரைவில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் இது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அசாதாரண சூழ்நிலையில் கூடுதல் கவனமாக இருப்பதற்காகவே ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக சென்னை முழுவதும் இருக்கும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற ரீதியில் நேற்று முதலே காவல் துறை அதிகாரிகள் சென்னை முழுக்க இயங்கி வரும் பல்வேறு தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News