செய்திகள்
மாதவரத்தில் லாரி அதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
மாதவரத்தில் லாரி அதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம்:
மாதவரம் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 1-வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சொந்தமாக லாரி வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
கடந்த 30-ந்தேதி இரவு ரமேஷ் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இன்று அதிகாலை திருப்பதியில் இருந்து வந்த ரமேஷ் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து அவர் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
மாதவரம் பகுதியில் அடிக்கடி இது போன்ற கொள்ளை சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். உடனே மர்ம கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.