செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 3 லட்சத்து 60 ஆயிரம் மலர்நாற்றுகள் நடவு பணி

Published On 2017-01-27 11:18 GMT   |   Update On 2017-01-27 11:18 GMT
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 3 லட்சத்து 60 ஆயிரம் மலர்நாற்றுகள் நடவு பணி தொடங்கியது.
குன்னூர்:

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக் கண்காட்சி மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

இதில் முதல்கட்டமாக நீண்ட வாழ்நாட்களை கொண்ட சால்வியா மற்றும் டேலியா செடிகள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்படுகிறது.

இந்தாண்டு பழக் கண்காட்சிக்காக 3 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் மற்றும் 2 ஆயிரம் மலர் செடிகள் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு கண்ணாடி மாளிகை மற்றும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலான்ச்சோ, செலோசியா, கஜானியா, பிரிமுலா, கோடெட்டியா, அமரான்தஸ் ட்ரைகலர், சால்வியா, ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச்மேரி கோல்டு, பேன்சி, பிளாக்ஸ், ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, கேன்டிடப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா மற்றும் டேலியா போன்ற 125 வகை செடிகள் அமெரிக்கா ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

Similar News