செய்திகள்

பவானி அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2017-01-25 15:51 IST   |   Update On 2017-01-25 15:51:00 IST
பவானி அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி:

பவானி அடுத்த சீனிவாச புரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் துரைராஜ் (வயது 17). இவரது சித்தப்பா மகள் மணிமேகலை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சரவணன் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையொட்டி காதலர்கள் இருவரும் அடிக்கடி துரைராஜ் வீட்டுக்கு வந்து விட்டு போவார்கள். இது அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்ற வடி வேலுவுக்கு (31) பிடிக்க வில்லை.

மேலும் வடிவேலுவுக்கும் துரைராஜிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வடிவேல்- துரைராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல் சூரி கத்தியால் துரைராஜை சரமாரியாக குத்தினாராம்.

இதில் படுகாயம் அடைந்த துரைராஜ் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News