செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்: பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார்

Published On 2017-01-07 19:32 IST   |   Update On 2017-01-07 19:32:00 IST
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள தாண்டகவுண்டம்பாளை யம் என்ற இடத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி இளவரசி. இவர்களது மகள் துளசிமணி (வயது20). பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மாதம் 16-ந் தேதி வேலைக்கு சென்ற துளசிமணியை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் வெள்ள கோவில் பகுதியை சேர்ந்த சஞ்சீவி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை துளசிமணி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இவர்கள் தஞ்சம் அடைந்தனர். இவர்களது காதல் திருமணத்தை துளசிமணியின் பெற்றோர் ஏற்கவில்லை.

இதனால் மகளிர் போலீசார் சமாதானம் பேசி காதல் திருமணம் செய்த துளசிமணி-சஞ்சீவியை அனுப்பி வைத்தனர். பிறகு சமாதானம் அடைந்த துளசிமணியின் பெற்றோர் தனது மகளை பார்ப்பதற்காக வெள்ளகோவிலில் உள்ள சஞ்சீவியின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு இருந்த சஞ்சீவியின் பெற்றோர் துளசிமணியின் பெற்றோரிடம், ‘‘எங்களது மகனுக்கு இதே வேலை தான். இது வரை அவன் 4 திருமணம் செய்து உள்ளான். இப்போது அவன் எங்கு இருக்கிறான்? என்பது எங்களுக்கு தெரியாது. எனவே உங்கள் மகளை தேடி இங்கு வராதீர்கள் என்று கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த துளசிமணியின் பெற்றோர் ஈரோடு வந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு சிவகுமாரிடம் மனு கொடுத்தனர். அதில் காதல் திருமணம் செய்த எங்களது மகளை மீட்டு கொடுக்கும்படியும், ஏமாற்றி திருமணம் செய்த சஞ்சீவி மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி உள்ளனர்.

Similar News