செய்திகள்

நெய்வேலி அருகே கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-01-04 16:21 IST   |   Update On 2017-01-04 16:21:00 IST
நெய்வேலி அருகே கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள நாச்சிவெள்ளையன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). விருத்தாசலம் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வயிற்றுவலி தாங்காமல் ராஜேஸ்வரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News