செய்திகள்

பயிர்கள் கருகியதால் மயங்கி விழுந்து பெண் விவசாயி பலி

Published On 2016-12-29 20:39 IST   |   Update On 2016-12-29 20:39:00 IST
முத்துப்பேட்டை அருகே சம்பா பயிர்கள் கருகியதால் உறவினர்களிடம் புலம்பி வந்த பெண் விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லை விளாகம் துரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (61). விவசாயி.

இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். இந்த பயிர்கள் தண்ணீர் இன்றி கருக தொடங்கியது. நேற்று வயலுக்கு சென்று கருகிய பயிர்களை பார்த்து அதிர்ச்சியுடன் வீடு திரும்பினார். பயிர்கள் கருகி விட்டதாக அவர் உறவினர்களிடம் புலம்பி உள்ளார். திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News