செய்திகள்

உடன்குடி ஒன்றியத்தில் பா.ஜ.க. தெருமுனை பிரச்சார கூட்டம்

Published On 2016-12-29 18:38 IST   |   Update On 2016-12-29 18:38:00 IST
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை கண்டித்தும் உடன்குடி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

உடன்குடி:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை கண்டித்தும் உடன்குடி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் குலசேகரன்பட்டினம், பரமன்குச்சி, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, தாங்கை கைலாசபுரம்,தேரியூர்,உடன்குடி பிரதான பஜார், சத்தியமூர்த்தி பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட 17 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஜெயக்குமார்,ஒன்றிய இளைஞரணித் தலைவர் சதீஷ், நகர இளைஞரணித் தலைவர் முத்து தர்மலிங்கம், ஒன்றியத்துணைத்தலைவர்கள் அழகேசன், சிவந்தி வேல், கண்ணன், ஒன்றிய செயலர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்,பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் ஆகியவை குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் பேசினார். இதில் திரளான பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News