செய்திகள்

சேகர்ரெட்டியை கைது செய்ய சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

Published On 2016-12-21 13:25 IST   |   Update On 2016-12-21 13:25:00 IST
131 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய சேகர்ரெட்டியை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேகர்ரெட்டியின் உறவினர் சீனிவாசரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் சேகர்ரெட்டியிடம் இருந்து 131 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப் ட்டது.

இதில் கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக வருமானவரி துறையினரும், அமலாக்க பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளும் சேகர்ரெட்டியிடம் விசாரித்தனர். 131 கோடிக்கும் சேகர் ரெட்டியிடம் கணக்கு கேட்கப்பட்டது. அதற்கு அவர் உரிய விளக்கம் அளித்து கணக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர்ரெட்டி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சேகர்ரெட்டியை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சேகர்ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வரும் போலீசார் இப்பணிகள் முடிந்ததும் அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேகர்ரெட்டியுடன் அவரது உறவினரான சீனிவாசரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரும் சிக்குகிறார்கள். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News