செய்திகள்

ஆத்தூர் அருகே தந்தை பலியான இடத்தில் விபத்தில் சிக்கிய மாணவன்

Published On 2016-12-19 18:37 IST   |   Update On 2016-12-19 18:37:00 IST
ஆத்தூர் அருகே தந்தை பலியான இடத்தில் மகன் விபத்தில் சிக்கியதால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் சர்வோதயா புரியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார்.  இவரது மகன் மாரியப்பன் (வயது10). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாரியப்பன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி மாரியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தந்தை விபத்தில் இறந்த அதே இடத்தில் தான் மாரியப்பன் மீதும் லாரி மோதியுள்ளது. குடும்பத்தை துரத்தும் துரதிஷ்டத்தால் மாரியப்பனின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Similar News