செய்திகள்
அறந்தாங்கி அருகே கோவிலுக்கு தீ வைப்பு: 5 பேர் கைது
அறந்தாங்கி அருகே கோவில் கொட்டகையை தீவைத்து எரித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த கருங்குழிக்காடு பகுதியில் சாம்பான் கோவில் என்ற கோவில் உள்ளது. கூரை கொட்டகையைக் கொண்ட இக்கோவிலை சுற்றி மரங்கள் அடர்த்தியாக அமைந்திருக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கருங்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த சுபீர்கான்(வயது28), அஜ்மீர்அலி(29), முகமதுரியாஸ்கான்(24), ஜகுபர்அலி(24), சலீம்(27) ஆகியோர் சாம்பான் கோவில் கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் கோவில் கொட்டகையை தீவைத்து எரித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.