செய்திகள்

புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

Published On 2016-12-07 18:25 IST   |   Update On 2016-12-07 18:25:00 IST
புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை அருகே உள்ள மணவிடுதி கிராமத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து அழுதும், கும்மி அடித்தும் பெண்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதைப்போல கம்மங்காடு மேலப்பட்டி, கூழையன்விடுதி உள்பட புதுக்கோட்டையின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும், கும்மி அடித்தும் அஞ்சலி செலுத்தினர்.

திருவரங்குளம் பகுதியில் உள்ள குக்கிராமங்கள் தோறும் பெண்கள் மறைந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் ஒப்பாரி வைத்தும் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்தினார்கள்.

திருவரங்குளம் அருகே வடக்குப்பட்டி, இம்மனாம்பட்டி, பொற்பனைக்கோட்டை, நடுஇம்மனாம்பட்டி, தேத்தாம்பட்டி, சிவந்திதோப்பு, வம்பன்காலனி, வம்பன் 4 ரோடு, கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, கே.வி.கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பூ விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் மலர்ந்த பூக்களை ஜெயலலிதாவின் உருவபடத்தின் மீது தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து விவசாயிகள் பல இடங்களில் ஒப்பாரிவைத்து தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்தினர். மேட்டுப்பட்டி, கைக் குறிச்சி, இந்திரா நகர், கேப்பரை, வல்லத்திராகோட்டை, குளவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News