செய்திகள்
நாகுடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியல்
நாகுடியில் நூறு நாள் வேலை பார்த்த பயனாளிகளுக்கு வங்கியில் கடந்த பல வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த நாகுடி ஊராட்சியில் நாகுடி, சீனமங்கலம், அருணாச்சலபுரம், மாணவநல்லூர் உள்ளிட்ட அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அந்த ஊராட்சியில் நடைபெறும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (நூறுநாள்வேலை) சேர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு அறந்தாங்கியில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு அங்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகுடி ஊராட்சியில் நூறு நாள் வேலை பார்த்த ஏராளமான பயனாளிகளுக்கு கடந்த பல வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பயனாளிகள் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சென்று கேட்டபோது, வேலை பார்த்த ஊதியம் இன்னும் கணக்கில் ஏறவில்லை என்று கூறினர். இதைத் தொடர்ந்து பயனாளிகள் நாகுடி வந்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது ஊதியம் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைப்போலவே நாகுடி ஊராட்சியில் நூறுநாள் வேலை பார்த்த பல பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், அவர்களை அங்கும் இங்கும் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பயனாளிகள் நேற்று பகல் நாகுடி ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் இருந்து வந்து அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், தாசில்தார் பரணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பயனாளிகள் சாலை மறியலை கைவிட்டனர். நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளின் மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.