செய்திகள்
எய்ட்ஸ் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர்
எய்ட்ஸ் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு புதுக்கோட்டை சார்பில் உலக எய்ட்ஸ் தினம் - 2016 மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவை துவக்கி வைத்து கலெக்டர் பேசியதாவது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து பொது மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் எச்.ஜ.வி,எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு புதுக்கோட்டை சார்பில் உலக எய்ட்ஸ் தினம்-2016 துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் எச்.ஜ.வியால் பாதிக்கப்பட்ட தொற்று உள்ள 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 2 நபர்களுக்கு தலா ரூ.1000 பரிசுத் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஜ.வி தொற்று உள்ளவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி மையத்தில் 3436 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2022 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நாம் அனைவரும் எச்.ஜ.வி பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவதுடன் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தழிக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.
எச்.ஜ.வி உள்ளவர்களை மதிக்கவும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளை செய்து வாழ்நாளை நீட்டித்து வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருக்க வேண்டும். இதன் மூலம் எச்.ஜ.வி, எய்ட்ஸ் இல்லா தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்றும் கலெக்டர் கணேஷ் பேசினார்.