செய்திகள்
அறந்தாங்கியில் விரைவில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்: நீதிபதி பேச்சு
அறந்தாங்கியில் விரைவில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ் தெரிவித்தார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்ற அறந்தாங்கியைச் சேர்ந்த எம்.கோவிந்தராஜிற்கு பாராட்டு விழா அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அறந்தாங்கி வக்கீல் சங்கத் தலைவர் பா.வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி மூத்த வக்கீல் ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜின் பணிகளை பாராட்டி பேசினர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ் ஏற்புரையாற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தான் பிறந்த மண்ணில் தனக்கு பாராட்டு விழா எடுத்த வக்கீல்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றத்திற்கான இடம் உள்ளதால், விரைவில் இங்கு சார்பு நீதிமன்றம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
விழாவில் நீதிபதிகள் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், லியாகத்அலி, அணில்குமார்,முருகவேல், கலையரசிரீனா, பிரின்ஸ் சாமுவேல்ராஜ், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி வக்கீல் சங்க செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். இணைச்செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.