செய்திகள்

தேனி அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி

Published On 2016-11-18 16:56 IST   |   Update On 2016-11-18 16:56:00 IST
தேனி அருகே தோழியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
தேனி:

தேனி அருகே உள்ள வீரபாண்டி உப்புகோட்டையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஸ்ரீநிதி. தேனியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும் அவருடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. வகுப்பு ஆசிரியர் 2 பேரையும் கண்டித்தார். மேலும் அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

இதனால மனமுடைந்த மாணவி ஸ்ரீநிதி நேற்று வீட்டில் இருந்த பேன் மருந்தை எடுத்து குடித்தார். இதனால் வாந்தி எடுத்து மயங்கிய அவரை பெற்றோர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News