செய்திகள்

சோழவந்தான் அருகே வெறிநாய் கடித்து மூதாட்டி பலி

Published On 2016-11-12 22:33 IST   |   Update On 2016-11-12 22:33:00 IST
சோழவந்தான் அருகே வெறிநாய் கடித்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி மலையாத்தாள், சரஸ்வதி, பால்சாமி, பிரேமா ஆகிய 4 பேரையும் சாலையில் சென்ற வெறிநாய் தலை மற்றும் முகம், கை, கால்களில் கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த பால்சாமி (60), சரஸ்வதி (70) ஆகியோரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். நாய் கடித்த இடங்களில் காயங்கள் ஆறிய நிலையில் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் செல்ல மாயாண்டி மனைவி சரஸ்வதி (70) வாயிலிருந்து உமிழ் நீராக வடிந்த நிலையில் அவர் நாய் போல் குரைக்க ஆரம்பித்துள்ளார்.

பின்னர் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்ததற்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே சரஸ்வதி இறப்புக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

Similar News