செய்திகள்

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 9 பேர் கைது

Published On 2016-11-12 16:28 IST   |   Update On 2016-11-12 16:28:00 IST
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் மற்றும் போலீசார் கீழ்வேளூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே உள்ள எறும்புகண்ணி கிராமத்தில் விஜயா, தமிழ்குடிமகன் ஆகியோர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா, தமிழ்குடிமகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் கிராமத்தில் பூங்கொடி, பனைமேட்டில் கண்ணகி, தேவூரில் சாரதா, பெருங்கடம்பனூரில் தங்கபாண்டியன், மாதவன், ஆவராணியில் மணிகண்டன், பனைமேடு பகுதியில் வேலாயுதம் ஆகியோர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணகி உள்பட 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் 9 பேரிடம் இருந்து 1000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News