செய்திகள்

சீர்காழி அருகே பஸ்-லாரி மோதி 12 பேர் படுகாயம்

Published On 2016-11-11 16:51 IST   |   Update On 2016-11-11 16:51:00 IST
சீர்காழி அருகே அரசு பஸ்சும் -லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீர்காழி:

நாகையிலிருந்து சீர்காழி நோக்கி சென்ற அரசு பஸ்சும், சென்னையிலிருந்து நாகப்பட்டிணம் நோக்கி சென்ற மினி லாரியும் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 வாகனங்களின் முகப்புகளும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கிடாமங்களத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பிரபு (வயது40), சென்னை புழலை சேர்ந்த மினி லாரி டிரைவர் ரவிக்குமார்(35), சிதம்பரத்தை சேர்ந்த கிளீனர் தங்கமணி(30) பஸ்சில் பயணம் செய்த 7 பேர் உள்ளிட்ட 12பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News