செய்திகள்

சம்பா பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பலி

Published On 2016-11-11 16:50 IST   |   Update On 2016-11-11 16:50:00 IST
கீழ்வேளூர் அருகே சம்பா பயிர் கருகியதால் வயலில் விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.
கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பரங்கி நல்லூரை சேர்ந்தவர் ஜெயபால் (60). இவர் தனது மகள் திருமணத்திற்காக நகை வாங்கி வைத்திருந்தார்.

அதனை அடகு வைத்து தனது 1½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்தார். இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் ஜெயபால் மன வருத்தத்தில் இருந்தார். நகைகளை மீட்க முடியாதே என்ற கவலை அவரை வாட்டியது.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் வயலுக்கு சென்றார். கருகிய பயிர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார். இன்று காலை வரை வீடு திரும்பாத அவரை தேடி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்றனர். அங்கு ஜெயபால் இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர். விவசாயி ஜெயபாலுக்கு மாலா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Similar News