செய்திகள்

விருத்தாசலத்தில் குடிபோதையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் - பயணிகள் அலறல்

Published On 2016-10-31 15:50 IST   |   Update On 2016-10-31 15:50:00 IST
விருத்தாசலத்தில் குடிபோதையில் 2 கி.மீட்டர் தூரம் பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நேற்று இரவு 8 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் பரமசிவம் ஓட்டினார். பஸ்சில் 50 பயணிகள் பயணம் செய்தனர்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் பஸ்சை டிரைவர் தாறுமாறாக ஓட்டினார். அவர் குடிபோதையில் பஸ்சை ஒட்டுவது தெரியவந்தது. பஸ் அந்த பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேல் மோதுவது போல் சென்றது. உடனே பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூறினார்கள்.

ஆனால் அவர் 2 கி.மீட்டர் தூரத்துக்கு வேகமாக பஸ்சை ஓட்டி சென்றார். இதனால் பயணிகள் அலறினார்கள். செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் பஸ்சை தென்கோட்டை வீதியில் வழிமறித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கி விட்டனர். அவர்கள் வேறு பஸ் மூலம் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடிபோதையில் இருந்த பஸ் டிரைவர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News