செய்திகள்

சென்னிமலை அருகே சூதாட்டம்: 20 பேர் கைது

Published On 2016-10-23 22:28 IST   |   Update On 2016-10-23 22:28:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடுபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு:

சென்னிமலை அருகே உள்ள கொண்டக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான பேர் கூடி பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். சுப்பிரமணி என்பவர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 120-ம் கைப்பற்றப்பட்டது.

சூதாட வந்தவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News