செய்திகள்
ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு புழக்கம்: தப்பியோடிய வடமாநில வாலிபரின் நண்பர் இன்று கைது
காஞ்சிபுரத்தில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வடமாநில வாலிபரின் நண்பரை போலீசார் இன்று கைது செய்தனர்.
ஆலந்தூர்:
ஆலந்தூர், உசேன் சுபேதா தெருவில் நேற்று மாலை தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சரிபுல்லாவை பொதுமக்கள் விரட்டி பிடித்து பரங்கிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் நண்பர் அப்துல்வகாப்புடன் தங்கி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 196 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ரூ.91 ஆயிரத்து 700 நல்ல ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் அப்துல்வகாப் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ஆலந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல்வகாப்பை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயில் பணிக்காக மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வந்து உள்ளனர். அவர்கள் ஆலந்தூர் பகுதி முழுவதும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களுக்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை மாற்ற கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது.
சரிபுல்லா, அப்துல்வகாப் ஆகியோருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார்? எந்தெந்த பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்று விசாரித்து வருகிறார்கள். மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.