செய்திகள்

மாமல்லபுரம் அருகே மதுவிருந்தில் வாலிபர்கள் மோதல் - 5 பேர் கைது

Published On 2016-10-12 14:37 IST   |   Update On 2016-10-12 14:37:00 IST
மாமல்லபுரம் அருகே மதுவிருந்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கடற்கரையில் தாம்பரத்தை சேர்ந்த 12 பேர் நண்பரின் பிறந்த நாளையொட்டி மது விருந்து வைத்தனர். அப்போது அவர்கள் பலத்த சத்தத்துடன் பாட்டு வைத்து நடனமாடியதாக தெரிகிறது.

இதனை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தட்டிக் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்களும் நொறுக்கப்பட்டன.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதற்குள் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன் குமார், குமார், நந்தகுமார், காமேஷ், பிரதீப் நாராயண் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News