செய்திகள்

ஆலந்தூர் அருகே கார்-லாரி மோதல்: 9 பேர் படுகாயம்

Published On 2016-10-12 14:22 IST   |   Update On 2016-10-12 14:23:00 IST
ஆலந்தூர் அருகே கார் மற்றும் லாரி மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆலந்தூர்:

விழுப்புரத்தை சேர்ந்தவர் சேகர் (41). இவர் நேற்று இரவு ஆலந்தூரில் சவாரி ஏற்றிக்கொண்டு கிண்டி கத்திபாரா நோக்கி சென்று கொண்டிருந்தார். சிமெண்ட் சாலை சந்திப்பில் வந்த போது எதிரே வந்த மினிலாரி கார் மீது மோதியது. பின்னர் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த 5 பேரும், லாரியில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷ், கார் டிரைவர் சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News