செய்திகள்
காஞ்சீபுரம் அருகே லாரி மீது கார் மோதல்: சென்னை வியாபாரி பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மீது கார் மோதலில் சென்னை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் கமல் (வயது 37). வியாபாரி. இவர் வேலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த மனைவியை அழைத்து வர காரில் சென்றார்.
காஞ்சீபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் சென்றபோது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் கமல் படுகாயமடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.