செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் தாறுமாராக ஓடிய கார் மோதி பெண் பலி: 8 பேர் காயம்

Published On 2016-10-11 14:26 IST   |   Update On 2016-10-11 14:26:00 IST
ஈஞ்சம்பாக்கத்தில் தாறுமாராக ஓடிய கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவான்மியூர்:

வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வசந்தி. இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீடு திரும்ப ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்தி நின்றார்.

அப்போது மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அது சாலையில் தாறுமாறாக ஓடி பஸ்நிலையத்தில் நின்ற வசந்தி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் தறிகெட்டு ஓடிய கார் அங்கு நின்ற ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, விக்டோரியா உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்து கார் டிரைவர் ராயப்பேட்டையை சேர்ந்த சார்லஸ் அந்தோணியை கைது செய்தனர்.

Similar News