செய்திகள்
நெய்வேலியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் கண்தானம்
நெய்வேலியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் கண்களை தானமாக வழங்கப்பட்டது.
நெய்வேலி:
நெய்வேலி அருகேயுள்ள ஏ.குறவன்குப்பம் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயமணி (வயது 45). இவர் பெரியாகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வேலைக்கு சென்ற ஜெயமணி வாகனங்களை தண்ணீரால் சுத்தம் செய்யும் மோட்டார் அறைக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த ஜெயமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் ஜெயமணியின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத்தினர் ஜெயமணியின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். ஜெயமணியின் கண்கள் புதுவை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.