செய்திகள்
பண்ருட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்
பண்ருட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம் அடைந்தான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 14). அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று அன்பரசன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பஸ்சில் ஏறினான். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தான்.
அம்மாபேட்டை அருகே பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய அன்பரசன் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.