செய்திகள்

கடலூரில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. நிர்வாகிக்கு தீவிர சிகிச்சை

Published On 2016-10-06 09:24 GMT   |   Update On 2016-10-06 09:24 GMT
கடலூரில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. நிர்வாகிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கூரைப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் அந்த பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாலும், இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாலும் கணேசன் மனமுடைந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்த கணேசன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது ஜெயலலிதா விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று கோ‌ஷமிட்டார்.

வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து விருத்தாசலம் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் ஆஸ்பத்திரியில் கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்த தகவல் அறிந்ததும் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News