செய்திகள்
சென்னையில் 2 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்: பயணிகள் கடும் வாக்குவாதம்
சென்னையில் 2 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.45 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ஏர்-இந்தியா விமானத்துக்காக 146 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரவேண்டிய இணைப்பு விமானம் எந்திர கோளாறு காரணமாக வராததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஏர்-இந்தியா விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் 87 பயணிகள் அவதி அடைந்தனர். தங்களுக்கு சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.