செய்திகள்

ஹஜ் பயணம் முடிந்து முதல் விமானம் சென்னை திரும்பியது

Published On 2016-10-04 07:18 IST   |   Update On 2016-10-04 07:18:00 IST
ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சவுதி அரேபியாவில் இருந்து 162 பெண்கள் உள்பட 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்து சேர்ந்தது.
ஆலந்தூர்:

முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 2,600 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சவுதி அரேபியாவில் இருந்து 162 பெண்கள் உள்பட 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். உறவினர்கள் அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர்.

Similar News