செய்திகள்

நீச்சல் குளத்தில் மது போதையில் குளித்த வாலிபர் பலி

Published On 2016-10-03 15:06 IST   |   Update On 2016-10-03 15:06:00 IST
நீச்சல் குளத்தில் மது போதையில் குளித்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

பெசன்ட்நகர் ஓடை குப்பத்தை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (38). மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல்காரராக பணி புரிந்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தன்னுடன் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்தார்.

இதை தொடர்ந்து நேற்று இரவு மைக்கேல் 10 பேருடன் நீலாங்கரை அக்கரையில் தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் அனைவரும் மது அருந்தினர். போதையில் மைக்கேல் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தார். அப்போது மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று மைக்கேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News