செய்திகள்

நமணசமுத்திரம் அருகே கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2016-09-28 13:59 IST   |   Update On 2016-09-28 13:59:00 IST
நமணசமுத்திரம் அருகே கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை:

நமணசமுத்திரம் அருகே உள்ள சிவபுரத்தைச் சேர்ந்தவர் திருவேங்கட பிரசாத். இவர் தனியார் கல்லூரி மாணவர். இவர் புதுக்கோட்டை நரிமேட்டுப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடையில் இருந்த பாண்டியன், காசி ஆகியோருடன் வாய் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் பிரசாத் சிவபுரம் வந்து விட்டார். இந்த சம்பவத்தால் ஆத்தரமடைந்த பாண்டியன், காசி இருவரும் சிவபுரம் வந்துள்ளார். அங்கிருந்த திருவேங்கிட பிராசாத்தை தாக்கினர். இதில் திருவேங்கிட பிராசாத் பலத்த கயமடைந்தார்.

இதுகுறித்து திருவேங்கிட பிராசாத் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருமயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

திருமயம் நீதிபதி இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News