செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு

Published On 2016-09-21 15:15 IST   |   Update On 2016-09-21 15:15:00 IST
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளும் நள்ளிரவில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை நுழைவு பகுதியில் நள்ளிரவு 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. நீண்ட நேரமாக அந்த பையை தேடி யாரும் வராததால் விமான நியைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பின்னரும் யாரும் பையை தேடி வரவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 பைகளையும் திறந்து சோதனை செய்தனர். அதில் பழைய துணிமணிகள் இருந்தது. பயணிகள் யாரோ பையை மறந்துவிட்டு விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

அதிகாலை 2.30 மணியளவில் 2 பேர் பைகளை தேடி மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்கள். அனாதையாக கிடந்த பைகள் அவர்களுக்கு சொந்தமானதுதானா? என விசாரித்து ஒப்படைக்கப்படுகிறது.

கேட்பாரற்று கிடந்த 2 பைகளும் நள்ளிரவில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் நீடித்தது.

Similar News